Monday, June 1, 2009

Re: பொய் முக‌ங்க‌ள்

ர‌சித்த‌ வ‌ர்க‌ளுக்கும், ர‌சிக்க‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி

2009/6/1 chillu karupatti <chilludhosth007@gmail.com>
பொய் முக‌ங்க‌ள்

அர‌க்க‌ ப‌றக்க‌ அவ‌சர‌மாய்
உடை மாற்றி
வெள்ளை ப‌வுட‌ரை பூசும் முன்_என்
முக‌ம் பார்க்கிறேன்
நிலைக்க‌ண்ணாடியில் ஒருமுறை
திரைபோட்டு ம‌றைத்துக்கொண்டு
கிள‌ம்புகையில்..

வெளியில் போகிறோம் என் தெரிந்தும்
ம‌றும‌க‌ளுக்கு ப‌ரிந்துபேசிய‌த‌றகாக‌_த‌லை
வாச‌லை அடைத்து கொண்டு
குந்தானி போல் அம‌ர்ந்திருக்கும்
ப‌க்க‌த்து வீட்டு பெரிய‌ம்மாவின்
செய‌ற்கை சிரிப்பில் தெரிகிற‌து
என் மேல் உள்ள‌ உச்ச‌க‌ட்ட‌ கோப‌ம்
இங்கு ஆர‌ம்ப‌ மாகிற‌து பொய் முக‌ங்க‌ள்

த‌ட‌ த‌டவென‌ ப‌டி இற‌ங்கி
தெருவை தொடுகையில்
வேட்டி ஈர‌ம் த‌ரையில் சொட்ட‌ சொட்ட‌
பின்ன‌ந்த‌லை சொரிந்து கொண்டு
சிவ‌ன் கோவில் அர்ச்ச‌க‌ர் ச‌ங்க‌ர‌ன் சுவாமிக‌ள்
வேண்டுமென்றே இள‌நீர் நெட்டியை
க‌ழிவு வாய்க்காலில் போட்டு விட்டு
த‌ண்ணீர் தேங்குகிற‌தென‌ முக‌ம் சுளித்து
க‌டிந்து கொள்கிறார்
துப்புர‌வு தொழிலாளியிட‌ம்!

ஒன்றுக்கு இர‌ண்டாய் லாப‌ம் க‌ண்டும்
ஈர‌டுக்கு மாடி கொண்டும் தீர‌வில்லை
ப‌ல்லை ம‌ட்டும் தேய்த்து விட்டு_ ப‌க‌ட்டாய்
நெற்றியில் விபூதியுட‌ன்
க‌ல்லாவில் அம‌ர்ந்திருக்கும்
ப‌ல‌ச‌ர‌க்கு க‌டை அண்ணாச்சிக்கு ப‌ண‌த்தாசை
பால் பாக்கெட்டிற்கு ஐம்ப‌து பைசா
குறைகிற‌தென‌ வெடுக்கென‌ பிடிங்கிக் கொண்டு
வெறுங்கையோடு விர‌ட்டுகிறார்
வ‌ய‌தான‌மூதாட்டியை!
 
நிச்ச‌ய‌மாய் இந்த‌ நாட்டுப் பிர‌ஜைதான்
க‌டைத்தெருவில் வ‌ருவோர்
போவோரிட‌ம் கைநீட்டி
எக்ஸ்கியூஸ் மி டூ ருப்பீஸ் ப்லீஸ்_என்று
குத்து விழுந்த‌ ரெக்கார்டாய் வ‌ச‌ன‌ம் பேசி
பிச்சை எடுக்கிறாள் பைத்திய‌க்கார‌ பெண்
சித்த‌ம் தெளிந்த‌ உற‌வுக‌ள் செய்த‌
சிற‌ப்பான‌ முய‌ற்சி
நாடு க‌ட‌த்துத‌ல் போல்_இது
மாநில‌ம் க‌ட‌த்துத‌லின் விளைவு!
 
நாலே எட்டில் ந‌டுரோடு தாண்டி
ந‌ட‌ந்தே செல்கிறேன்
நாலு காசு ச‌ம்பாதிக்க‌
ஒவ்வொரு வினைக்கும்
அத‌ற்கு ச‌ம‌மான‌ எதிர் வினை உண்டாமே
பொய்யாக்கி செல்கின்ற‌ன‌
என் புன்ன‌கைக்கு ப‌திலிருக்கும்
ச‌க‌ ம‌னித‌ர்க‌ளின் திருமுக‌ங்க‌ள்
கூட்டுங்க‌ள் க‌ட்ட‌ ப‌ஞ்சாய‌த்து
நியூட்ட‌னுக்கு_நான்
உண்மையாக‌த்தானே சிரித்தேன்
அவ‌னை க‌ளுவில் ஏற்ற‌
ம‌ன‌ம் வ‌ர‌வில்லை என‌க்கு!
 
எப்ப‌டியும் எட்டு ம‌ணி நேர‌ம்
ப‌ல்லை காட்டிக்கொண்டு
க‌ழிகிற‌து ப‌க‌ற்பொழுது
ப‌க்க‌த்து இருக்கையில் குளிக்காம‌ல்
வ‌ந்த‌வ‌ரை கூட‌ சொல்ல முடியாம‌ல்
புளுங்கி போகிற‌து உள்ள‌ம்
இது எதையும் உள் வாங்காதே
என‌ சொல்லியும்
உள்ளுக்குள் ம‌ற‌க்காம‌ல்
ம‌றைத்து வைக்கிற‌து என் ம‌ன‌து
என்னிட‌மும் பொய் முக‌ம் காட்டி!
 

 

 

 


பொய் முக‌ங்க‌ள்

பொய் முக‌ங்க‌ள்

அர‌க்க‌ ப‌றக்க‌ அவ‌சர‌மாய்
உடை மாற்றி
வெள்ளை ப‌வுட‌ரை பூசும் முன்_என்
முக‌ம் பார்க்கிறேன்
நிலைக்க‌ண்ணாடியில் ஒருமுறை
திரைபோட்டு ம‌றைத்துக்கொண்டு
கிள‌ம்புகையில்..

வெளியில் போகிறோம் என் தெரிந்தும்
ம‌றும‌க‌ளுக்கு ப‌ரிந்துபேசிய‌த‌றகாக‌_த‌லை
வாச‌லை அடைத்து கொண்டு
குந்தானி போல் அம‌ர்ந்திருக்கும்
ப‌க்க‌த்து வீட்டு பெரிய‌ம்மாவின்
செய‌ற்கை சிரிப்பில் தெரிகிற‌து
என் மேல் உள்ள‌ உச்ச‌க‌ட்ட‌ கோப‌ம்
இங்கு ஆர‌ம்ப‌ மாகிற‌து பொய் முக‌ங்க‌ள்

த‌ட‌ த‌டவென‌ ப‌டி இற‌ங்கி
தெருவை தொடுகையில்
வேட்டி ஈர‌ம் த‌ரையில் சொட்ட‌ சொட்ட‌
பின்ன‌ந்த‌லை சொரிந்து கொண்டு
சிவ‌ன் கோவில் அர்ச்ச‌க‌ர் ச‌ங்க‌ர‌ன் சுவாமிக‌ள்
வேண்டுமென்றே இள‌நீர் நெட்டியை
க‌ழிவு வாய்க்காலில் போட்டு விட்டு
த‌ண்ணீர் தேங்குகிற‌தென‌ முக‌ம் சுளித்து
க‌டிந்து கொள்கிறார்
துப்புர‌வு தொழிலாளியிட‌ம்!

ஒன்றுக்கு இர‌ண்டாய் லாப‌ம் க‌ண்டும்
ஈர‌டுக்கு மாடி கொண்டும் தீர‌வில்லை
ப‌ல்லை ம‌ட்டும் தேய்த்து விட்டு_ ப‌க‌ட்டாய்
நெற்றியில் விபூதியுட‌ன்
க‌ல்லாவில் அம‌ர்ந்திருக்கும்
ப‌ல‌ச‌ர‌க்கு க‌டை அண்ணாச்சிக்கு ப‌ண‌த்தாசை
பால் பாக்கெட்டிற்கு ஐம்ப‌து பைசா
குறைகிற‌தென‌ வெடுக்கென‌ பிடிங்கிக் கொண்டு
வெறுங்கையோடு விர‌ட்டுகிறார்
வ‌ய‌தான‌மூதாட்டியை!
 
நிச்ச‌ய‌மாய் இந்த‌ நாட்டுப் பிர‌ஜைதான்
க‌டைத்தெருவில் வ‌ருவோர்
போவோரிட‌ம் கைநீட்டி
எக்ஸ்கியூஸ் மி டூ ருப்பீஸ் ப்லீஸ்_என்று
குத்து விழுந்த‌ ரெக்கார்டாய் வ‌ச‌ன‌ம் பேசி
பிச்சை எடுக்கிறாள் பைத்திய‌க்கார‌ பெண்
சித்த‌ம் தெளிந்த‌ உற‌வுக‌ள் செய்த‌
சிற‌ப்பான‌ முய‌ற்சி
நாடு க‌ட‌த்துத‌ல் போல்_இது
மாநில‌ம் க‌ட‌த்துத‌லின் விளைவு!
 
நாலே எட்டில் ந‌டுரோடு தாண்டி
ந‌ட‌ந்தே செல்கிறேன்
நாலு காசு ச‌ம்பாதிக்க‌
ஒவ்வொரு வினைக்கும்
அத‌ற்கு ச‌ம‌மான‌ எதிர் வினை உண்டாமே
பொய்யாக்கி செல்கின்ற‌ன‌
என் புன்ன‌கைக்கு ப‌திலிருக்கும்
ச‌க‌ ம‌னித‌ர்க‌ளின் திருமுக‌ங்க‌ள்
கூட்டுங்க‌ள் க‌ட்ட‌ ப‌ஞ்சாய‌த்து
நியூட்ட‌னுக்கு_நான்
உண்மையாக‌த்தானே சிரித்தேன்
அவ‌னை க‌ளுவில் ஏற்ற‌
ம‌ன‌ம் வ‌ர‌வில்லை என‌க்கு!
 
எப்ப‌டியும் எட்டு ம‌ணி நேர‌ம்
ப‌ல்லை காட்டிக்கொண்டு
க‌ழிகிற‌து ப‌க‌ற்பொழுது
ப‌க்க‌த்து இருக்கையில் குளிக்காம‌ல்
வ‌ந்த‌வ‌ரை கூட‌ சொல்ல முடியாம‌ல்
புளுங்கி போகிற‌து உள்ள‌ம்
இது எதையும் உள் வாங்காதே
என‌ சொல்லியும்
உள்ளுக்குள் ம‌ற‌க்காம‌ல்
ம‌றைத்து வைக்கிற‌து என் ம‌ன‌து
என்னிட‌மும் பொய் முக‌ம் காட்டி!
 

 

 

 

Tuesday, May 26, 2009

இறைவா காப்பாற்று!

இறைவா காப்பாற்று!

     
இன்று

ச‌ர‌ஸ்வ‌தி பூஜை என‌
ம‌ன‌து ப‌ட‌பட‌க்கிற‌து

சாமி முன்னால் ப‌டைக்க‌ப‌ட்ட‌து
சுண்ட‌ல் ம‌ட்டுமா?
என் புத்த‌க‌மும் அல்ல‌வா

உள்ளிருக்கும்
ம‌திப்பெண் அட்டை
வெளியில் எட்டிப்பார்த்தால்
தேங்காய் உடைக்க‌ப்ப‌ட‌ப்போவ‌து
என் உச்ச‌ந்த‌லையில்
என்று தெரிந்தும்

ப‌ஹ‌வானே ப‌ரிட்சையில்
ப‌தில் தெரியாம‌ல் முளிக்கும்
ப‌க்க‌த்து பெஞ்ச்
பைய‌னைபோல்
நீயும் க‌ண்ணை
உருட்டிக்கொண்டிருக்காம‌ல்
எப்ப‌டியாவ‌து என்னை
காப்பாற்று!

Monday, May 25, 2009

வாரா வார‌ம்! ஆர‌வார‌ம்!

என்ன‌வ‌னே!
           வாரா வார‌ம்
           பார்க்க‌ வ‌ருகிறாய்
           ஆர‌வார‌மாய்

           சொம்பு த‌ண்ணீரில்
           ஆர‌ம்பித்து
           கார‌ம்,இனிப்பு என
           வித‌வித‌மாய்

           உள்ளே போன‌து
           ஜீர‌ண‌மாக‌
           முழுமிராண்டாவையும்
           முடித்துவிட்டு

           கிள‌ம்புகையில்
           கிழ‌ங்க‌ளிட‌ம் ம‌ட்டும்
           சொல்லி செல்கிறாய்
           போன‌தும்
           ப‌தில் சொல்கிறேன் என்று

           மீண்டும் அடுத்த‌ வார‌ம்
           ஆர‌வார‌மாய்
           சொம்பு த‌ண்ணீரில்
           ஆர‌ம்பித்து.....
           எல்லாம் மாற்ற‌மில்லாம‌ல்

           என்ன‌வ‌ன் ம‌ட்டும்
           வேறோரு பெய‌ரில்...


       

Saturday, May 23, 2009

தெரிந்தோ!தெரியாம‌லோ!


தெரிந்தோ!தெரியாம‌லோ!

தெரிந்தோ தெரியாம‌லோ
சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்
காய‌ப்ப‌டுதிவிடுகிறேன்

அன்பாய் பேசினாலும்
அத‌ட்டுகிறேன் அம்மாவை‌

அநாவ‌சிய‌மாய் அழுது
அட‌ம்பிடித்து அப்பபாவை

பிடிக்கும் என‌ தெரிந்தும்
ஒன்றுமில்லாம‌ல் சாப்பிட்டு அக்காவை

பிடிக்காது என‌ தெரிந்தும்
எதிர்த்து பேசி அண்ண‌னை

என்னிட‌ம் இருந்தும் த‌ர‌மாட்டேன்
என‌ சொல்லி தம்பியை

தெரிந்தோ தெரியாம‌லோ
ச‌ண்டையிட்டு என் ந‌ண்ப‌ர்க‌ளை....

காய‌ம் என்ன‌வோ அவ‌ர்க‌ளுக்குதான்
க‌ண்ணீர் வ‌ருவ‌து ம‌ட்டும்
என் க‌ண்ணில்!

எப்ப‌டி புரிய‌ வைப்பேன் நான்
தெரியாம‌ல் தான்
செய்தேன் என்ப‌தை....

தெரிந்தே ந‌டிக்கிறார்க‌ளோ?
நான் அழ‌வேண்டும் என்று

Friday, May 22, 2009

ஏனோ ஒரு க‌ட்டுக்குள்!


மாய‌க‌ட்டுக‌ள்!

         கிஷ்கிந்தா,எம்.ஜி.எம்,வி.ஜி.பி‍_எனும்
         செய‌ற்கையான‌ பிளாக்த‌ண்ட‌ர் பூங்காக்க‌ள்

         ஜெட்டிக்ஸ்,கார்ட்டூன்,சுட்டி டி.வி_என‌
         பெற்றோரைத் தாண்டி

         பெரிய‌ அள‌வில் ம‌னித‌ முக‌ங்க‌ளை
         பார்த்த‌றியாத‌ பாப்பாக்க‌ள்
        
         த‌ன் முக‌த்தை தானெ பார்த்து
         சிரிக்கின்ற‌ன‌ வீட்டுக்குள்

         வெற்று உல‌கோடு
         வெறும‌னே பேசிக்கொண்டு

         வாச‌லில் காவ‌லிருக்கும்
         வெள்ளை வேட்டி தாத்தாக்க‌ள்

         ஏனோ ஒரு க‌ட்டுக்குள்!

சில்லுவின் ரீங்காரம்..

 

ம‌னிதா! ம‌னிதா!
               ஜாதி ம‌ர‌ங்க‌ளுக்கு
               உர‌ம் போட்டு
               செந்நீர் சிந்து வ‌தை விட‌

               ம‌னித‌ நேய‌த்திற்கு
               ஒரு துளி க‌ண்ணீர்
               சிந்து!
              
               என்றாவ‌து ஒருநாள்
               அத‌ன் நிழ‌லில்
               இளைப்பார‌ட்டும்
               ம‌னித‌ம்!