Tuesday, May 26, 2009

இறைவா காப்பாற்று!

இறைவா காப்பாற்று!

     
இன்று

ச‌ர‌ஸ்வ‌தி பூஜை என‌
ம‌ன‌து ப‌ட‌பட‌க்கிற‌து

சாமி முன்னால் ப‌டைக்க‌ப‌ட்ட‌து
சுண்ட‌ல் ம‌ட்டுமா?
என் புத்த‌க‌மும் அல்ல‌வா

உள்ளிருக்கும்
ம‌திப்பெண் அட்டை
வெளியில் எட்டிப்பார்த்தால்
தேங்காய் உடைக்க‌ப்ப‌ட‌ப்போவ‌து
என் உச்ச‌ந்த‌லையில்
என்று தெரிந்தும்

ப‌ஹ‌வானே ப‌ரிட்சையில்
ப‌தில் தெரியாம‌ல் முளிக்கும்
ப‌க்க‌த்து பெஞ்ச்
பைய‌னைபோல்
நீயும் க‌ண்ணை
உருட்டிக்கொண்டிருக்காம‌ல்
எப்ப‌டியாவ‌து என்னை
காப்பாற்று!

Monday, May 25, 2009

வாரா வார‌ம்! ஆர‌வார‌ம்!

என்ன‌வ‌னே!
           வாரா வார‌ம்
           பார்க்க‌ வ‌ருகிறாய்
           ஆர‌வார‌மாய்

           சொம்பு த‌ண்ணீரில்
           ஆர‌ம்பித்து
           கார‌ம்,இனிப்பு என
           வித‌வித‌மாய்

           உள்ளே போன‌து
           ஜீர‌ண‌மாக‌
           முழுமிராண்டாவையும்
           முடித்துவிட்டு

           கிள‌ம்புகையில்
           கிழ‌ங்க‌ளிட‌ம் ம‌ட்டும்
           சொல்லி செல்கிறாய்
           போன‌தும்
           ப‌தில் சொல்கிறேன் என்று

           மீண்டும் அடுத்த‌ வார‌ம்
           ஆர‌வார‌மாய்
           சொம்பு த‌ண்ணீரில்
           ஆர‌ம்பித்து.....
           எல்லாம் மாற்ற‌மில்லாம‌ல்

           என்ன‌வ‌ன் ம‌ட்டும்
           வேறோரு பெய‌ரில்...


       

Saturday, May 23, 2009

தெரிந்தோ!தெரியாம‌லோ!


தெரிந்தோ!தெரியாம‌லோ!

தெரிந்தோ தெரியாம‌லோ
சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்
காய‌ப்ப‌டுதிவிடுகிறேன்

அன்பாய் பேசினாலும்
அத‌ட்டுகிறேன் அம்மாவை‌

அநாவ‌சிய‌மாய் அழுது
அட‌ம்பிடித்து அப்பபாவை

பிடிக்கும் என‌ தெரிந்தும்
ஒன்றுமில்லாம‌ல் சாப்பிட்டு அக்காவை

பிடிக்காது என‌ தெரிந்தும்
எதிர்த்து பேசி அண்ண‌னை

என்னிட‌ம் இருந்தும் த‌ர‌மாட்டேன்
என‌ சொல்லி தம்பியை

தெரிந்தோ தெரியாம‌லோ
ச‌ண்டையிட்டு என் ந‌ண்ப‌ர்க‌ளை....

காய‌ம் என்ன‌வோ அவ‌ர்க‌ளுக்குதான்
க‌ண்ணீர் வ‌ருவ‌து ம‌ட்டும்
என் க‌ண்ணில்!

எப்ப‌டி புரிய‌ வைப்பேன் நான்
தெரியாம‌ல் தான்
செய்தேன் என்ப‌தை....

தெரிந்தே ந‌டிக்கிறார்க‌ளோ?
நான் அழ‌வேண்டும் என்று

Friday, May 22, 2009

ஏனோ ஒரு க‌ட்டுக்குள்!


மாய‌க‌ட்டுக‌ள்!

         கிஷ்கிந்தா,எம்.ஜி.எம்,வி.ஜி.பி‍_எனும்
         செய‌ற்கையான‌ பிளாக்த‌ண்ட‌ர் பூங்காக்க‌ள்

         ஜெட்டிக்ஸ்,கார்ட்டூன்,சுட்டி டி.வி_என‌
         பெற்றோரைத் தாண்டி

         பெரிய‌ அள‌வில் ம‌னித‌ முக‌ங்க‌ளை
         பார்த்த‌றியாத‌ பாப்பாக்க‌ள்
        
         த‌ன் முக‌த்தை தானெ பார்த்து
         சிரிக்கின்ற‌ன‌ வீட்டுக்குள்

         வெற்று உல‌கோடு
         வெறும‌னே பேசிக்கொண்டு

         வாச‌லில் காவ‌லிருக்கும்
         வெள்ளை வேட்டி தாத்தாக்க‌ள்

         ஏனோ ஒரு க‌ட்டுக்குள்!

சில்லுவின் ரீங்காரம்..

 

ம‌னிதா! ம‌னிதா!
               ஜாதி ம‌ர‌ங்க‌ளுக்கு
               உர‌ம் போட்டு
               செந்நீர் சிந்து வ‌தை விட‌

               ம‌னித‌ நேய‌த்திற்கு
               ஒரு துளி க‌ண்ணீர்
               சிந்து!
              
               என்றாவ‌து ஒருநாள்
               அத‌ன் நிழ‌லில்
               இளைப்பார‌ட்டும்
               ம‌னித‌ம்!

ப‌ரிசுக்க‌விதை‍_2001

                        ஆத‌ங்க‌ம்   (மாடு)

ஆதி ப‌க‌வ‌னின் எல்லைய‌ற்ற‌ ப‌டைப்பான்
அல‌ங்கார‌ப் பிர‌ப‌ஞ்ச‌ம‌வ‌ள் விழிப்புணர்வு சூரிய‌னின்
பொன்னொளி சுட‌ரில் த‌ன்னை வ‌ண்ண‌க்
க‌ல‌வையால் வ‌கை வகையாய் அழ‌காக்கினாள்,

ஆத‌வ‌னின் க‌டைக்க‌ண் பார்வையால் எங்கும்
கொக்க‌ர‌க்கோ என்னும் சூரிய‌ நாத‌ம்
வெள்ளிக் கோடுக‌ளாய் பாய்ந்துவ‌ரும்
அருவியின் ச‌ங்கீத‌ ச‌ல்ச‌ல்ப்புக்கு ம‌த்தியில்

ஞான‌க் க‌ண்ணே! இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தில்தான்
எத்த‌னைக் க‌ண்க‌ள் எத்த‌னை இமைக‌ள்
அத்த‌னையும் உன் தீண்ட‌லில் விழித்துக்கொள்ள‌
நான் ம‌ட்டும் மூடிய‌ இமைக‌ளுக்குள்

வ‌ழ‌க்க‌ம் போல‌வே க‌ன்றின் தோலால்
ப‌சுவினை ஏமாற்றும் ம‌(மா)க்க‌ள் கூட்ட‌ம்,
இப்ப‌டி ப‌ல‌ த‌ரும‌ நெறிக‌ள் சீர்குலைந்து
எங்கெங்கோ போகிற‌து ம‌னித‌ ச‌மூக‌ம்

மாண‌வ‌னை என் பெய‌ர் சொல்லி த‌ண்டிக்கும்
ஆசிரிய‌ர் அறிவாரோ அத‌ன் பொருள் செல்வ‌மென்று
எப்ப‌டியும் வாழ‌லாம் என்ற‌ ஜ‌ன‌த்தொகை
ஏராள‌ம் பெருகுவ‌தால் யாருக்கு என்ன‌ லாப‌ம்?

இப‌ப‌டியே என் க‌ன‌வுல‌க‌ம் தொட‌ர்கையில்
க‌ழுத்தில் க‌ன‌மாய் ஏதோ ஒரு உண‌ர்வு
நீண்ட‌ நாட்க‌ளுக்கு பின் க‌ல‌ப்பையின் தீண்டல்
ம‌கிழ்ச்சியில் மெய் சிலிர்த்தேன் மிக‌ அருகில் என்ச‌காவோடு

க‌ழுத்தில் பூட்டிய‌ஏர் வைர‌ம் அணிந்த‌ பெருமையும்
கால் புதைந்த‌ சேரு ப‌ட்டு மெத்தை சுக‌த்தையும்
அள்ளித‌ற‌வே என் ம‌ன‌ம் ஆன‌ந்த‌த்தில்
ஆட்ட‌ம் போட்ட‌து க‌ழுத்தும‌ணி தாள‌த்தில்

எப்ப(வோ)டியோ கேட்ட‌ குல‌வை ஒலி க‌ன‌வை க‌லைக்க‌
திடுக்கிட்டு விழித்தேன், புதுப்பானையில் புத்த‌ரிசி
எண்ணை விள‌க்கோடு, தோகை க‌ரும்பும், புது நெல்லும்
ப‌ருப்பும், ப்யிரும், ப‌டிஅரிசியும் அங்கே

உருண்ட‌ என் விழிக‌ள் ம‌ருண்ட‌ நான்
என்ன‌வென்று பார்த்தேன், இன்று மாட்டு பொங்கலாம்
இடிவிழுந்த‌ என் நெஞ்ச‌ம் க‌ண்ணீர் முத்துக்க‌ளாய் சித‌றிய‌து
ச‌ந்த‌ன‌ப்பொட்டு ச‌கித‌மாய் மாலையோடு என் இட‌த்திலே ஒருவ‌ன்

டிராக்ட‌ர் என்னும் பெய‌ரிலே வ‌ந்த‌ ராட்ச‌ஷ‌ன் ‍_அவ‌ன்
க‌ழுத்திலே ம‌ணி இல்லை ஆனால் பாம் பாம் என்னும் அல‌ர‌ல்
இய‌ற்கையான‌ புல்லும் வைக்கோலும் அத‌ன் கால‌டியில் இருந்தும்
இன்ப‌மாய் அது குடிக்கும் பெட்ரோலும் டீச‌லும் ஏராள‌ம்

வீசும் தென்ற‌லும் எரியும் நெருப்பும்
விழா காணும் வீதிக‌ளும் அப்ப‌டியே இருப்பினும்
என்ன‌ ஆயிற்று இய‌ற்கை அன்னைக்கு
நான் ம‌ட்டும் அங்கே உரு மாறிய‌ நிலையில்

உல‌க‌ம் உருண்டை என்ப‌து உண்மையானால்
உன்ன‌த‌மான‌ ம‌னித‌ குல‌ம் நிலைக்குமானால்
என் க‌ன‌வுக‌ளும் ப‌ழ‌மையும் நிச்ச‌ய‌ம் திரும்ப‌ வ‌ரும்
மூடிய‌ இமைக‌ளுக்குள் மீண்டும் நான் க‌ன‌வுல‌கில்...! 
 
எழுதிய‌வ‌ர்: செல்வி.உமா ம‌ஹேஸ்வ‌ரி.வ
      
இட‌ம்:த‌மிழ‌ய்யா க‌ல்வி க‌ழ‌க‌ம்
      திருவையாரு

கிடைத்த‌ ப‌ரிசு:க‌வித்தில‌க‌ம் ப‌ட்ட‌ம்

Thursday, May 21, 2009

இது அப்ப‌டித்தான்

வ‌லிக்காவிட்டாலும் ந‌டிப்பேன்
வ‌லித்த‌து போல்

வ‌லித்தாலும் ந‌டிப்பேன்
வ‌லிக்காத்து போல்

அடித்த‌து என் அண்ண‌னாக‌
இருந்தால்

உன் காதல்

நிர‌ந்த‌ர‌மாய் நினைவு ப‌டுத்துகிற‌து
உன் காத‌லை

நான் எப்பொழுதாவ‌து
இடித்துவிட்டு போகும்

என் வீட்டு ஜ‌ன்ன‌ல் க‌த‌வு

நீர் துளி.......


வேக‌மாய் அடித்து ஓய்ந்த‌
ம‌ழையை விட‌

ர‌சிக்கும் ப‌டி இருந்தது என்
வீட்டுக்கூரையின் விளிம்பில்

நிதான‌மாய் சொட்டிக்கொண்டிருந்த
நீர் துளி.......